எண்ணாகமம் 8:3ஆரோனின் கீழ்ப்படிதல்
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.
Numbers 8:3
ஆரோனின் கீழ்ப்படிதல்
கர்த்தர் சொன்னபடியே ஆரோன் விளக்குகளை ஏற்றி வைத்தார். இங்கே ஒரு வார்த்தை மாறாமல், ஒழுங்கு தவறாமல் அவர் செய்தார் என்பதைக் கவனியுங்கள். பெரிய பொறுப்பு வகிக்கும் ஆரோன், சிறு வேலையிலும் கீழ்ப்படிதலைக் காட்டினார். தேவனுடைய காரியங்களில் சிறியது என்று எதுவும் இல்லை.
