நீதிமொழிகள் 12:2கர்த்தரின் தயை
நல்லவன் கர்த்தரிடத்தில் தயைபெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.
Proverbs 12:2
கர்த்தரின் தயை
நல்ல மனதுடையவன் யார் பார்த்தாலும் விரும்பப்படுவான், கர்த்தரிடத்திலும் தயை பெறுவான். ஆனால் கெட்ட எண்ணங்களை வளர்க்கிறவனுக்கு அது தானாகவே தண்டனையை கொண்டு வரும். நம் உள் மனதின் எண்ணங்களே நம் வெளித்தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. கர்த்தர் நம் இருதயத்தைப் பார்க்கிறார் என்பது எத்தனை ஆறுதல்.
