நீதிமொழிகள் 17:12கரடியை விட கொடியது
தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.
Proverbs 17:12
கரடியை விட கொடியது
குட்டிகளைப் பறிகொடுத்த கரடி எவ்வளவு பயங்கரமானதோ, அதைவிட மோசம் தன் மதிகேட்டில் அடம்பிடிக்கும் மூடன் என்கிறார் சாலொமோன். கரடியின் கோபத்திற்கு ஒரு காரணம் உண்டு, ஆனால் மூடனுடைய அறியாமையால் வரும் ஆபத்துக்கு அளவே இல்லை. இப்படிப்பட்டவரோடு பழகும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதே இதன் புத்தி.
