நீதிமொழிகள் 18:19கோபங்கொண்ட சகோதரன்
அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.
Proverbs 18:19
கோபங்கொண்ட சகோதரன்
பாதுகாப்பான கோட்டையை கைப்பற்றுவது கடினம் என்றால், கோபங்கொண்ட சகோதரனை மீண்டும் நல்வழிக்குக் கொண்டு வருவது அதைவிட கடினம். குடும்பத்தினருக்குள் ஏற்படும் விரோதம் இரும்புத் தாழ்ப்பாள் போல் இறுக்கமாகி விடும். இது எவ்வளவு உண்மை - அந்நியரிடம் நடக்கும் சண்டையை விட, நமக்கு நெருக்கமான உறவினரோடு நடக்கும் சண்டையே ஆற்றுதற்கு கடினமானது. அன்பான உறவுகளை பராமரிக்க கூடுதல் மென்மை தேவை.
