நீதிமொழிகள் 2:4புதையல் தேடுதல்
அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
Proverbs 2:4
புதையல் தேடுதல்
வெள்ளியை நாடுவதும், புதையலைத் தேடுவதும் ஒப்பீடாக வருகின்றன இங்கே. ஒருவன் புதையல் தேடும்போது எவ்வளவு பிரயத்தனம் எடுக்கிறான், எத்தனை நேரம் செலவிடுகிறான் என்று நினைத்துப் பாருங்கள். ஞானத்தையும் அதே தீவிரத்துடன், அதே பிரயத்தனத்துடன் தேட வேண்டும் என்பதே சாலொமோனின் வேண்டுகோள். எளிதில் கிடைப்பது எப்போதும் விலைமதிப்பற்றதாக இருக்காது.
