நீதிமொழிகள் 20:3வழக்கிலிருந்து விலகல்
வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
Proverbs 20:3
வழக்கிலிருந்து விலகல்
வாக்குவாதத்திலும் வழக்கிலும் தலையிடாமல் விலகுவது மனுஷனுக்கு பெருமையாகும் என்று சாலொமோன் சொல்கிறார். ஒவ்வொரு விவகாரத்திலும் நுழைந்து சண்டைபிடிக்க வேண்டியதில்லை. மூடனுக்குத்தான் ஒவ்வொரு வாக்குவாதத்திலும் இறங்கி தன் அபிப்பிராயத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அமைதியாக விலகுவதே பெரிய ஞானமாகும்.
