நீதிமொழிகள் 24:28பொய் சாட்சி வேண்டாம்
நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.
Proverbs 24:28
பொய் சாட்சி வேண்டாம்
நியாயமின்றி பிறனுக்கு விரோதமாய் சாட்சியாக ஏற்படக் கூடாது, உதடுகளால் வஞ்சகம் பேசக் கூடாது என்று சாலொமோன் எச்சரிக்கிறார். இது பத்து கட்டளைகளில் சொன்ன 'பொய்ச் சாட்சி சொல்லாதே' என்ற கட்டளையை நினைவூட்டுகிறது. நமது வார்த்தைகள் மற்றவரின் வாழ்க்கையையும் நற்பெயரையும் அழிக்கும் சக்தி கொண்டவை. அதனால் சாட்சி சொல்லும் பொருப்பை நேர்மையுடன் நிறைவேற்றுவது மிக முக்கியம்.
