நீதிமொழிகள் 25:12கடுக்கனும் புத்தியும்
கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி.
Proverbs 25:12
கடுக்கனும் புத்தியும்
ஒரு அழகான கடுக்கன் காதிலே எப்படி பொலிவைக் கூட்டுகிறதோ, அப்படியே கேட்கிற செவிக்கு ஞானமாய் கடிந்து புத்திசொல்லுகிறவன் அழகைக் கூட்டுகிறார். இங்கே இரண்டு பேர் தேவை - சொல்பவர் ஞானமாக சொல்ல வேண்டும், கேட்பவர் திறந்த மனதுடன் கேட்க வேண்டும். திருந்த மனசில்லாத ஒருவனுக்கு எவ்வளவு நல்ல அறிவுரையும் பயன்படாது. நல்ல அறிவுரையைக் கேட்கும் மனது இருந்தால் அது நமக்கு விலைமதிப்பான ஆபரணம் போன்றது.
