நீதிமொழிகள் 26:5பதில் சொல்லு
மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
Proverbs 26:5
பதில் சொல்லு
முந்தின வசனத்திற்கு நேர் மாறாக, இங்கே மூடனுக்குப் பதில் சொல்லும்படி சொல்கிறார். ஏனெனில் பதில் சொல்லாவிட்டால், அவன் தன்னுடைய தவறான எண்ணத்தையே சரி என்று நினைத்துக் கொண்டு, தன்னைத்தானே ஞானி என்று மதித்துக் கொள்வான். இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொன்று முரணல்ல, ஞானம் என்பது சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவது என்பதை காட்டுகிறது. எப்போது பேசலாம், எப்போது அமைதி காக்கலாம் என்பதை பகுத்தறிவது தான் மெய் ஞானம்.
