நீதிமொழிகள் 26:9முள்ளும் பழமொழியும்
மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
Proverbs 26:9
முள்ளும் பழமொழியும்
குடிவெறியில் இருப்பவன் கையில் ஒரு முள் அகப்பட்டால், அவனுக்கு அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் தன்னையே காயப்படுத்திக் கொள்வான். அதேபோல மூடனின் வாயில் ஒரு நல்ல, ஞானமான பழமொழி அகப்பட்டாலும், அவனுக்கு அதைச் சரியாகப் பயன்படுத்த அறியாமையினால் அது தானே காயத்தை உண்டுபண்ணும். அறிவைப் பெறுவது ஒரு விஷயம், அதைப் புரிந்து சரியாகப் பயன்படுத்துவது வேறு விஷயம். வார்த்தை மட்டும் தெரிந்தால் போதாது, அதன் உள்ளர்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
