நீதிமொழிகள் 27:8கூட்டைவிட்டு அலையும் குருவி
தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.
Proverbs 27:8
கூட்டைவிட்டு அலையும் குருவி
தன் கூட்டை விட்டு வெளியே அலையும் ஒரு குருவி பாதுகாப்பு இல்லாமல் திசைதெரியாமல் பறக்கும், அது ஆபத்தில்தான் இருக்கும். அதுபோலவே, கர்த்தர் நமக்கு கொடுத்த இடத்தை - குடும்பம், வேலை, ஊர் - விட்டு காரணமில்லாமல் அலைபவனும் அமைதியை இழக்கிறான். இது நிலைத்திருக்க வேண்டியவற்றில் நிலைத்திருப்பதன் மதிப்பைச் சொல்கிறது. நமக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நம்பிக்கையோடு வாழ்வோம்.
