நீதிமொழிகள் 31:14வியாபாரக் கப்பல்
அவள் வியாபாரக் கப்பல்களைப் போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள்.
Proverbs 31:14
வியாபாரக் கப்பல்
தூரதேசங்களிலிருந்து பொருட்களைக் கொண்டுவரும் வியாபாரக் கப்பல்களுக்கு அவளை ஒப்பிடுகிறார் இந்தக் கவிஞர். அவள் வெறும் வீட்டை மட்டும் பார்த்துக்கொள்பவள் அல்ல, திறமையோடு தூரமும் சென்று தன் வீட்டாருக்கு நல்லதைத் தேடிக் கொண்டுவரும் ஞானமுள்ளவள். வெளியுலகைப் புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனமும் அவளிடம் இருந்தது. குடும்பத்தின் நலனுக்காக முயற்சி எடுப்பது எந்த ஸ்திரீக்கும் அழகு.
