நீதிமொழிகள் 8:19தங்கத்தைவிட நல்ல பலன்
பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது.
Proverbs 8:19
தங்கத்தைவிட நல்ல பலன்
பொன்னையும் தங்கத்தையும் விட ஞானத்தின் பலன் நல்லது, சுத்த வெள்ளியை விட அதன் வருமானம் நல்லது என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் மீண்டும் மீண்டும் ஞானத்தின் மதிப்பு பொருளாதார செல்வத்தை விட மேலானது என்று சொல்லப்படுவது தற்செயலானது அல்ல. நம் மனது எதன் மேல் இருக்கிறது, செல்வத்தின் மேலா ஞானத்தின் மேலா என்பதைச் சிந்திக்கச் சொல்கிறது இந்த வசனம்.
