சங்கீதம் 103:2மறவாத நினைவு
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
Psalms 103:2
மறவாத நினைவு
கடந்த காலத்தில் கர்த்தர் செய்த உபகாரங்களை மறந்துவிடக் கூடாது என்று தாவீது தனக்குத்தானே எச்சரிக்கிறார். மனிதனுக்கு நல்லது கிடைக்கும்போது மகிழ்ச்சி, ஆனால் காலம் செல்லச் செல்ல அதை மறந்துவிடும் பழக்கம் உண்டு. இங்கே 'சகல உபகாரங்களையும்' என்று சொல்வது ஒன்றிரண்டல்ல, எண்ணிலடங்காத நன்மைகள் என்பதைக் காட்டுகிறது. இன்று வரை நம் வாழ்வில் கர்த்தர் செய்த நன்மைகளை ஒவ்வொன்றாய் நினைவுகூர்வோம்.
