சங்கீதம் 107:16தாழ்ப்பாள் முறிந்தது
அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
Psalms 107:16
தாழ்ப்பாள் முறிந்தது
வெண்கலக் கதவுகளையும் இரும்பு தாழ்ப்பாள்களையும் தேவனே உடைத்தார் என்று இந்த வசனம் தெளிவாக சொல்கிறது - எந்த மனித வழியும் இல்லாதபோதும் அவருக்கு வழி இருக்கிறது. வெண்கலமும் இரும்பும் அன்று மிகவும் வலிமையான, உடைக்க முடியாத பொருட்களாக கருதப்பட்டன. அதையும் தேவன் எளிதாக முறிக்கிறார் என்பது அவரின் வல்லமை மட்டு மீறியது என்பதை காட்டுகிறது. நம் வாழ்வில் உடைக்க முடியாதது என்று நினைக்கும் எதுவும் அவருக்கு முன் நிற்காது.
