சங்கீதம் 119:102போதித்த ஆசிரியர்
நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.
Psalms 119:102
போதித்த ஆசிரியர்
தேவனே தனக்கு போதித்திருப்பதால் அவரது நியாயங்களை விட்டு விலகவில்லை என்று சொல்கிறார். வேறு எந்த மனித ஆசிரியனும் அல்ல, தேவனே நேரடியாக அவருடைய இருதயத்தில் போதித்திருக்கிறார். போதிக்கப்பட்ட வார்த்தையை பின்பற்றுவது எளிது, ஏனெனில் அது நம் இருதயத்தில் பதிந்திருக்கும். தேவன் நேரடியாக நமக்கும் போதிக்க அனுமதிக்கும் இருதயம் நமக்கும் வேண்டும்.
