சங்கீதம் 139:7எங்கே ஓடுவேன்
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்?
Psalms 139:7
எங்கே ஓடுவேன்
இந்த கேள்வி ஒரு தப்பிக்கும் நினைவிலிருந்து வருவதல்ல, ஆச்சரியத்திலிருந்து வருகிறது. கர்த்தருடைய ஆவியிலிருந்தும் சமுகத்திலிருந்தும் எங்கும் மறையமுடியாது என்பதை தாவீது உணர்கிறார். இதே கேள்வியை யோனா தன் வாழ்க்கையில் அனுபவமாக அறிந்தார், யோனா 1:3 ஓடிப்போக முயன்றும் முடியவில்லை. நாம் எங்கு சென்றாலும் அவர் சமுகம் நம்முடன் இருக்கும் என்பது பாதுகாப்பான உண்மை.
