சங்கீதம் 27:6ஆனந்த பலியின் பாட்டு
இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
Psalms 27:6
ஆனந்த பலியின் பாட்டு
சத்துருக்களுக்கு மேலாக தலை உயர்த்தப்படும் நாள் வரும்போது, தாவீது என்ன செய்வேன் என்கிறார்? கீத்தனம் பாடுவேன், பலியிடுவேன் என்கிறார். வெற்றி வந்தபின் அவருடைய முதல் எண்ணம் தன் பெருமையல்ல, கர்த்தருக்கு நன்றி சொல்வதே. இது நமக்கும் ஒரு நல்ல பழக்கம் - நல்லது நடந்தால் முதலில் கர்த்தரை நினைப்பது.
