சங்கீதம் 58:1நீதி பேசாத நியாயாதிபதிகள்
மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?
Psalms 58:1
நீதி பேசாத நியாயாதிபதிகள்
தாவீது இந்தப் பாடலை எழுதும்போது, நியாயம் விசாரிக்க வேண்டிய அதிகாரிகளே அநீதி செய்வதைப் பார்த்து மனம் வெதும்பினார். 'மவுனமாயிருக்கிறவர்களே' என்று அவர்களை அழைக்கிறார் - ஏனெனில் அவர்கள் உண்மையை மூடிமறைத்து, ஒன்றும் அறியாதவர்போல் இருந்தார்கள். நியாயம் செய்ய வேண்டியவர்களே நியாயத்தை கொலை செய்தால் எவ்வளவு வேதனை. இதே கேள்வியை இன்றும் நம் நெஞ்சம் பல தலைவர்களைப் பார்த்துக் கேட்கிறது.
