சங்கீதம் 65:7கடலை அமர்த்துகிறவர்
சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.
Psalms 65:7
கடலை அமர்த்துகிறவர்
கடலின் அலைகள் ஆர்ப்பரித்து மும்முரமாய் இரைச்சலிடும் காட்சியை சங்கீதக்காரர் நினைவில் கொண்டு பாடுகிறார். அந்த பயங்கரமான சப்தத்தையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிற வல்லமை தேவனுக்கு மட்டுமே உண்டு. இயற்கையின் கொந்தளிப்பையும் மனுஷரின் கலகத்தையும் ஒரே கையால் அடக்குகிறவர் அவர். நம் வாழ்வின் புயல்களையும் அமர்த்த அவருக்கு வல்லமை உண்டு.
