சங்கீதம் 66:1பூமியே பாடு
பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீராய்ப் பாடுங்கள்.
Psalms 66:1
பூமியே பாடு
இந்தச் சங்கீதம் தொடங்குவதே ஒரு பேரழைப்புடன் தான். இஸ்ரவேலர் மட்டுமல்ல, பூமியில் வசிக்கும் எல்லாரும் தேவனுக்கு முன்பாக ஆர்ப்பரித்துப் பாட வேண்டும் என்று அழைக்கிறார் சங்கீதக்காரர். ஏனென்றால் தேவன் ஒரு ஜாதிக்கு மட்டும் தேவனாக இல்லாமல், எல்லா பூமிக்கும் ராஜாவாக இருக்கிறார். இந்த மகிழ்ச்சி அடக்கிவைக்க முடியாத, வெளியே கொண்டாடும் மகிழ்ச்சி.
