சங்கீதம் 75:5இறுமாப்புள்ள கழுத்து
உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள், இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.
Psalms 75:5
இறுமாப்புள்ள கழுத்து
இறுமாப்புள்ள கழுத்துடன் பேசுவது என்பது தலையை நிமிர்த்தி, மற்றவரைப் பார்க்காமல் பெருமையுடன் வார்த்தையாடுவதைக் குறிக்கிறது. இது நேற்று சொன்ன எச்சரிக்கையின் தொடர்ச்சி, கொம்பை உயர்த்தாதே என்பது இன்னும் வலியுறுத்தப்படுகிறது. மனிதன் தன் சாதனைகளைப் பார்த்து தன்னைப் பெரிதாக நினைக்கும் போதெல்லாம் தேவன் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். தலை குனிந்து நடக்கும் மனது தேவனுக்கு பிரியமானது.
