சங்கீதம் 78:55பங்கிட்ட தேசம்
அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
Psalms 78:55
பங்கிட்ட தேசம்
கானான் தேசத்தை நூல்போட்டு, அதாவது அளவுகோலால் அளந்து, கோத்திரங்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார். யோசுவா 13:7 முதல் தேச பங்கீட்டின் விவரங்களைக் காட்டுகிறது. ஜாதிகளைத் துரத்திவிட்டு தம் ஜனங்களுக்கு இடம் கொடுத்தது தேவனுடைய உண்மையின் அடையாளம். வாக்குத்தத்தம் செய்தது தேவன், அதை நிறைவேற்றியதும் அவரே.
