சங்கீதம் 89:16நாமத்தில் களிகூறுதல்
அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
Psalms 89:16
நாமத்தில் களிகூறுதல்
கர்த்தருடைய நாமத்தில் நாடோறும் மகிழும் ஜனங்கள் அவருடைய நீதியால் உயர்ந்து நிற்கிறார்கள் என்று பாடகர் சொல்கிறார். இது ஒருநாள் மகிழ்ச்சி அல்ல, ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படும் மகிழ்ச்சி. கர்த்தருடைய நீதி நமக்குச் சொந்தமாக இருப்பதால்தான் நாம் தலையெடுத்து நடக்க முடிகிறது. இந்த வசனம் இஸ்ரவேலின் பொற்காலத்தை நினைவுகூர்கிறது, அதனையே அடுத்த வசனங்களில் இழந்த நிலைமையுடன் ஒப்பிடப் போகிறார்.
