ரோமர் 14:12தன் கணக்கு தானே
ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.
Romans 14:12
தன் கணக்கு தானே
முந்தின வசனங்களின் முடிவாக பவுல் சொல்கிறார் — ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்கு கணக்கு ஒப்புவிப்பான். அடுத்தவனது கணக்கை பரிசோதிக்கும் வேலை நமக்கில்லை, ஒவ்வொருவருக்கும் தன் சொந்த பொறுப்பு உண்டு. இதை உணர்ந்தால், மற்றவரை நியாயம் தீர்க்கும் பழக்கம் தானாக குறையும்.
