ரோமர் 2:3தப்பிக்க முடியுமா?
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயா?
Romans 2:3
தப்பிக்க முடியுமா?
மற்றவர்களைக் குற்றவாளி என்று தீர்த்துவிட்டு, தானும் அதே தவறைச் செய்பவன், தேவனுடைய கண்ணிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைக்கிறானா என்று பவுல் கேட்கிறார். இது ஒரு கேள்வியாக அவர் எழுப்புவது, படிப்பவரை சிந்திக்க வைக்கும் விதமாகவே. மனுஷனை மறைத்துக்கொள்ளக்கூடிய இருள் இருக்கலாம், ஆனால் தேவனிடமிருந்து மறைவது என்பது இல்லவே இல்லை. நம்முடைய இரட்டை வேஷங்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய வசனம் இது.
