ரோமர் 3:1யூதனுடைய மேன்மை என்ன?
இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?
Romans 3:1
யூதனுடைய மேன்மை என்ன?
இரண்டாம் அதிகாரத்தில் பவுல், யூதனும் புறஜாதியும் பாவத்தில் சமமே என்று காட்டியிருந்தார். அதைக் கேட்டவுடன் ஒரு கேள்வி எழும்பும் அல்லவா, அப்படியானால் யூதனாக இருப்பதில் என்ன பயன்? விருத்தசேதனத்தில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று. பவுல் இந்தக் கேள்வியை மறைக்காமல், தானே எடுத்து முன்வைக்கிறார். இது ஒரு நல்ல ஆசிரியரின் லட்சணம், கேள்விகளுக்கு பயப்படாதது.
