ரோமர் 3:23மகிமையற்றவர்கள்
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,
Romans 3:23
மகிமையற்றவர்கள்
‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி’ என்ற இந்த வசனம் இந்த அதிகாரத்தின் மையக்கருத்தை சுருக்கமாக சொல்கிறது. தேவன் மனுஷனை படைத்தபோது அவருடைய மகிமையை பிரதிபலிக்கும்படியாகவே படைத்தார். பாவம் அந்த மகிமையை மறைத்துவிட்டது, யூதனிலும் புறஜாதியிலும் விதிவிலக்கு இல்லை. இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதே கிருபையை புரிந்துகொள்ள முதல் அடி.
