உன்னதப்பாட்டு 1:6திராட்சத்தோட்டக் காவலாளி
நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
Song of Songs 1:6
திராட்சத்தோட்டக் காவலாளி
இங்கே அவள் தன் கடந்த வாழ்க்கையை விளக்குகிறாள். தன் சொந்த சகோதரர்கள் அவள் மேல் கோபமாக இருந்து, திராட்சத்தோட்டங்களைக் காக்கும் கடினமான வேலையில் அவளை வைத்திருந்தார்கள். அதனால் வெயிலில் அவள் அதிக நேரம் இருந்திருக்க வேண்டும், தன் சொந்த அழகைக் கவனிக்கும் நேரமும் அவளுக்கு இல்லாமல் போயிற்று. குடும்பத்தில் நடக்கும் கடினமான காரியங்களையும் நம் வாழ்க்கை பாதையையும் தேவன் இன்னும் அழகான ஒன்றாக மாற்ற வல்லவர்.
