சகரியா 7:12வைரம்போல கடினமான இருதயம்
வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.
Zechariah 7:12
வைரம்போல கடினமான இருதயம்
'வைராக்கியம்' என்பது வைரக்கல் போன்ற கடினத்தைக் குறிக்கும் சொல் - எத்தனை அடித்தாலும் உடையாத கடினத்தன்மை. வேதத்தையும், கர்த்தருடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகள் சொன்ன வார்த்தைகளையும் கேட்க மனதில்லாமல் இருதயத்தைக் கடினமாக்கினார்கள். இதனாலேயே மகா கடுங்கோபம் கர்த்தரிடத்திலிருந்து உண்டானது. இருதயம் கடினமாகும் முன்பே கர்த்தருடைய வார்த்தைக்கு செவிசாய்க்க கற்றுக்கொள்வோம்.
