செப்பனியா 1:5இரு கடவுளை வணங்குதல்
வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும்,
Zephaniah 1:5
இரு கடவுளை வணங்குதல்
வீட்டு மேல்கூரையில் நின்று நட்சத்திரங்களையும் கிரகங்களையும் வணங்குவது அக்காலத்தில் பரவலாக இருந்த ஒரு பழக்கம். மேலும் மக்கள் கர்த்தர் பேரிலும் ஆணையிட்டு, அதே நேரம் மல்காம் என்ற அன்னிய தேவன் பேரிலும் ஆணையிடுவார்கள். இரண்டு படகில் கால் வைத்து நடப்பது போன்ற இந்தப் போக்கை கர்த்தர் விரும்பவில்லை. முழு மனதோடு ஒருவரையே பின்பற்றுவது தான் உண்மையான பக்தி என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.
