1 கொரிந்தியர் 13:1ஓசையிடும் வெண்கலம்
நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
1 Corinthians 13:1
ஓசையிடும் வெண்கலம்
கொரிந்து சபையில் சிலர் அந்நிய பாஷைகளில் பேசுவதை பெரிய வரமாக எண்ணி பெருமை கொண்டிருந்தார்கள். பவுல் அவர்களிடம் சொல்கிறார், தூதர் பாஷையையே பேசினாலும் அன்பு இல்லாவிட்டால் அது 'சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும்' இருக்குமாம். கோவில் திருவிழாக்களில் வெறும் இரைச்சல் கேட்பது போல, அர்த்தமில்லாத சத்தமாகிவிடும். எவ்வளவு பெரிய திறமையாக இருந்தாலும், அன்பு இல்லாத வார்த்தை வெறும் காற்றுத்தான்.
