1 கொரிந்தியர் 4:7பெற்றது கொடையே
அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?
1 Corinthians 4:7
பெற்றது கொடையே
கொரிந்தியரில் சிலர் தங்கள் அறிவையும் வரங்களையும் தங்கள் சொந்த சாதனையாக நினைத்து பெருமை கொண்டிருந்தார்கள். பவுல் ஒரு எளிய கேள்வி கேட்கிறார்: 'நீ பெற்றுக்கொள்ளாதது யாது'? நீ பெற்றதைக்கூட உன் சொந்த முயற்சியென்று எண்ணி பெருமை கொள்வது எப்படி நியாயம்? நமக்கிருக்கும் ஒவ்வொன்றும் கொடையே, சொந்த சம்பாத்தியம் அல்ல என்பதை நினைவில் வைப்போம்.
