1 சாமுவேல் 1:20கேட்டேன் என்ற பெயர்
சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.
1 Samuel 1:20
கேட்டேன் என்ற பெயர்
அன்னாள் ஒரு குமாரனைப் பெற்று, 'கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன்' என்று சொல்லி அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள். இந்தப் பெயரின் பொருள் தேவனுடைய பெயர் என்று சிலர் விளக்குகின்றனர்; வேறு சிலர் கேட்கப்பட்டவன் என்று விளக்குகின்றனர். எப்படியிருந்தாலும் ஒவ்வொரு முறை அன்னாள் தன் மகனை பெயர் சொல்லி அழைக்கும்போதும், தேவனுடைய பதிலை நினைவுகூர்ந்தாள். நம் வாழ்வில் தேவன் செய்த காரியங்களை நினைவுகூரும் இப்படி சின்ன அடையாளங்கள் இருப்பது எவ்வளவு நல்லது.
