1 சாமுவேல் 30:11வெளியில் கண்ட எகிப்தியன்
ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,
1 Samuel 30:11
வெளியில் கண்ட எகிப்தியன்
வழியில் ஒரு எகிப்தியனை கண்டார்கள் - உணவும் தண்ணீரும் தந்தார்கள் அவனுக்கு. அவர்கள் யுத்தத்திற்கு விரைந்து போகும் நேரத்திலும் ஒரு பசியுள்ளவனுக்கு கருணை காட்ட நேரம் ஒதுக்கினார்கள். இந்த சிறு கருணையே பெரிய வெற்றிக்கு வழி திறந்தது.
