1 சாமுவேல் 30:7ஏபோத்தின் கேள்வி
தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டு வந்தான்.
1 Samuel 30:7
ஏபோத்தின் கேள்வி
தாவீது முதலில் என்ன செய்தார் தெரியுமா? ஆசாரியன் அபியத்தாரை அழைத்து ஏபோத்தைக் கொண்டுவரச் சொன்னார். இது தேவனுடைய சமூகத்தில் வழிகாட்டுதல் தேட ஒரு அடையாள வஸ்திரம். சொந்த புத்தியில் ஓடிப்போகாமல், முதலில் தேவனை நோக்கினார் தாவீது.
