1 சாமுவேல் 30:6தேவனில் திடம்
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
1 Samuel 30:6
தேவனில் திடம்
ஜனங்கள் தங்கள் சொந்த வேதனையில் தாவீதையே குற்றப்படுத்தி கல்லெறியத் திட்டமிட்டார்கள். தலைவனாக இருப்பது எத்தனை கடினமான நேரம் இது! ஆனாலும் தாவீது மனுஷரை நோக்கவில்லை, 'தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்'. நம் வாழ்விலும் எல்லாரும் நம்மைவிட்டு விலகும் நேரம் வரும்போது, தேவனிடம் ஓடுவதே சிறந்த வழி.
