2 நாளாகமம் 24:22கர்த்தர் பார்ப்பார் என்ற வார்த்தை
அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.
2 Chronicles 24:22
கர்த்தர் பார்ப்பார் என்ற வார்த்தை
யோய்தா யோவாசுக்குச் செய்த எல்லா நன்மையையும் மறந்து, அவனுடைய குமாரனையே ராஜா கொன்று போட்டான் - எத்தனை மறதியான, கொடூரமான செயல். சாகும் தருணத்தில் சகரியா 'கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார்' என்று சொன்னார். இயேசு தமது காலத்தில் இந்த சகரியாவைப் பற்றி குறிப்பிட்டதை மத்தேயு 23:35 இல் நாம் காண்கிறோம். நன்றி கெட்டவர்களைத் தேவன் மறவார் என்பதே இந்த வார்த்தையின் ஆழம்.
