2 இராஜாக்கள் 6:12படுக்கையறை ரகசியம்
அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.
2 Kings 6:12
படுக்கையறை ரகசியம்
ஊழியர்களில் ஒருவன் மெல்லிய குரலில் உண்மையைச் சொன்னான், சீரியாவில் ஒற்றன் இல்லை, இஸ்ரவேலிலிருக்கும் தீர்க்கதரிசி எலிசா ராஜாவின் படுக்கையறை பேச்சைக் கூட தேவனிடமிருந்து அறிந்துகொள்கிறார். இது எவ்வளவு ஆச்சரியமான உண்மை. மனுஷனின் மறைவான வார்த்தைகளும் தேவனுக்கு முன்பாக மறைவாக இல்லை.
