2 சாமுவேல் 22:4கூப்பிடும்போதே விடுதலை
ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.
2 Samuel 22:4
கூப்பிடும்போதே விடுதலை
ஸ்துதிக்குப் பாத்திரரானவரை நோக்கிக் கூப்பிடுவதே தாவீதின் பழக்கமாக இருந்தது. அவர் முதலில் ஸ்தோத்திரம் செய்கிறார், பின்பே உதவி கேட்கிறார் என்பதைக் காணலாம். கூப்பிடுதலும் விடுதலையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருப்பதை அவர் தன் அனுபவத்தில் கண்டறிந்தார். இது ஒரு வழக்கமான ஜெப முறையையே காட்டுகிறது.
