அப்போஸ்தலர் 17:27நமக்கு தூரமல்லாதவர்
கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
Acts 17:27
நமக்கு தூரமல்லாதவர்
தேவனை மனிதர்கள் தேடி, 'தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாக' அவர் ஜனங்களை வேறுவேறு காலங்களிலும் இடங்களிலும் அமைத்தார். அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவர் அல்ல என்பதே பவுலின் இதயம் நிறைந்த வார்த்தை. தேவனைத் தேடும் மனம் இருந்தால் அவரைக் கண்டடையலாம் என்னும் இந்த வாக்குறுதி எத்தனை ஆறுதலானது.
