அப்போஸ்தலர் 2:44ஒரே இருதயம்
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
Acts 2:44
ஒரே இருதயம்
விசுவாசித்தவர்கள் எல்லாரும் ஒருமித்திருந்து தங்களிடம் இருந்த அனைத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். இது எல்லோருக்கும் கட்டாயம் விதிக்கப்பட்ட ஒரு சட்டம் அல்ல, தாங்களே அன்பினால் தூண்டப்பட்டு செய்த ஒரு காரியம். ஒருவருக்கு தேவை என்று தெரிந்தால் மற்றவர் தயங்காமல் கொடுத்தார்கள். அன்பு இருந்தால் பொருள் பற்றி பேராசை இருக்காது என்பதை அவர்கள் வாழ்க்கையால் காட்டினார்கள்.
