அப்போஸ்தலர் 4:31இடம் அசைந்தது
அவர்கள் ஜெபம்பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரிமாய்ச் சொன்னார்கள்.
Acts 4:31
இடம் அசைந்தது
அவர்கள் ஜெபம் பண்ணின இடமே அசைந்தது, எல்லோரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தேவவசனத்தை தைரியமாய் சொன்னார்கள். இது தேவன் அவர்கள் ஜெபத்திற்கு உடனடியாக பதில் தந்த ஒரு புலனுக்குப்படும் அடையாளம். பயமுறுத்தல்களை நீக்காமலேயே, அவர்களுக்கு தைரியத்தை நிறைவாக அளித்தார் தேவன். 'தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்' என்பதே அவர்களது ஜெபத்திற்கு நேரடி பதில்.
