தானியேல் 12:6எவ்வளவு காலம் செல்லும்?
சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.
Daniel 12:6
எவ்வளவு காலம் செல்லும்?
சணல்வஸ்திரம் தரித்த புருஷனை நோக்கி ஒரு தூதன் மிக முக்கியமான கேள்வியைக் கேட்கிறார் — இந்த ஆச்சரியமான காரியங்களின் முடிவு எப்போது வரும் என்று. இந்த ‘சணல்வஸ்திரம் தரித்த புருஷன்’, தானியேல் 10ல் தானியேலுக்கு தோன்றிய தேவதூதனாக இருக்கலாம். மனுஷனுக்கு இயல்பாகவே இருக்கும் கேள்வி இதுதான் — இந்தத் துன்பம் எத்தனை காலம் இருக்கும் என்பது. நம் வாழ்விலும் இதே கேள்வியை நாம் தேவனிடம் கேட்கும் நாட்கள் இருக்கும்.
