உபாகமம் 14:29திக்கற்றோர் திருப்தி
லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
Deuteronomy 14:29
திக்கற்றோர் திருப்தி
லேவியனுக்கு மட்டுமல்ல, பரதேசிக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் இந்த மூன்றாம் வருஷ தசமபாகம் திருப்திக்காகக் கொடுக்கப்படவேண்டும். இவர்கள் அன்றைய சமூகத்தில் தங்களைப் பாதுகாக்க சொத்தோ சுதந்தரமோ இல்லாதவர்கள். இப்படிச் செய்யும்போது, 'உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்' என்ற வாக்குத்தத்தமும் தரப்படுகிறது. கொடுப்பதும் ஆசீர்வாதம் பெறுவதும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. நாமும் நம் சூழலில் இருக்கும் தேவையுள்ளவர்களை நினைத்து கொடுக்கும் மனது வேண்டும்.
