எஸ்தர் 6:11வீதியில் உலா
அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும் படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான்.
Esther 6:11
வீதியில் உலா
ஆமான் தான் விரும்பியதை, தனக்கு விரோதமான மனுஷனுக்குச் செய்தான். மொர்தெகாயை அலங்கரித்து குதிரையின்மேல் ஏற்றி, நகர வீதியில் உலா வரச்செய்து, 'ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும்' என்று தானே கூறினான். இது எவ்வளவு கசப்பான கடமையாக இருந்திருக்கும்! நான் யாருக்கு கண்ணி வைக்கிறேனோ, அதே கண்ணியில் நானே விழலாம் என்பதற்கு இது ஒரு நேரடி எடுத்துக்காட்டு.
