யாத்திராகமம் 16:12நான் உங்கள் தேவன்
இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
Exodus 16:12
நான் உங்கள் தேவன்
முறுமுறுப்பை கேட்ட கர்த்தர் கோபிக்காமல் இறைச்சியும் அப்பமும் தருவேன் என்று வாக்குக் கொடுத்தார். 'நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள்' என்பதுதான் இதன் உண்மையான குறிக்கோள். வயிற்றுப் பசியை தணிப்பது மட்டும் நோக்கம் அல்ல, தம்மை அறியவைப்பதே கர்த்தருடைய ஆசை. கடினமான தேவை நேரங்களில்தான் கடவுளை நெருங்கி அறிந்துகொள்ளும் வாய்ப்பும் வருகிறது.
