எசேக்கியேல் 36:10மறுபடியும் மனுஷர்
நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும்.
Ezekiel 36:10
மறுபடியும் மனுஷர்
பாழாய்க் கிடந்த பட்டணங்கள் மறுபடியும் குடியேற்றப்படும் என்றும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும் என்றும் கர்த்தர் வாக்குத்தத்தம் செய்கிறார். இஸ்ரவேல் வம்சம் முழுவதுமே அங்கே வர்த்திக்கும். வெறுமையாய் இருந்த வீடுகளில் மறுபடியும் குடும்பங்கள் நிரம்பும். வெறுமையின் நடுவிலும் கர்த்தர் நிறைவின் நாளைத் திட்டமிட்டிருக்கிறார்.
