எஸ்றா 9:6முகம் ஏறெடுக்க வெட்கம்
என்தேவனே, நான் என்முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.
Ezra 9:6
முகம் ஏறெடுக்க வெட்கம்
எஸ்றா ஜெபத்தை ஆரம்பித்தது எப்படி தெரியுமா? தன் முகத்தை தேவனுக்கு முன்பாக ஏறெடுக்கவே வெட்கமும் கலக்கமும் அடைந்தார் என்று சொல்லி. 'எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று' என்று அவர் அழுதார். தன்னை பாவம் செய்யாதவராக காட்டிக்கொள்ளாமல், மக்களின் பாவத்தில் தானும் பங்குதாரர் என்று உணர்ந்த ஒரு தலைவனின் மனநிலை இது.
