ஆதியாகமம் 18:25சர்வலோக நியாயாதிபதி
துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத்தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.
Genesis 18:25
சர்வலோக நியாயாதிபதி
'நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத்தூரமாயிருப்பதாக' என்று ஆபிரகாம் தைரியமாக பேசுகிறார். சர்வலோக நியாயாதிபதியாகிய கர்த்தர் நீதியில்லாமல் செயல்படமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கை இதில் தெரிகிறது. கர்த்தருடைய குணத்தை நன்கு அறிந்தவனாகவே ஆபிரகாம் இப்படி பேசத் துணிகிறார்.
